சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட விவகாரத்தில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். சபாநாயகரின் இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும், இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕