ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து ஃபோர்ஸ் ஐடென்டிபிகேசன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. டிஜிட்டல் மயமாக்கப்பட்டால் மொபைல் போன் அல்லது ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் ஆவணங்களைப் பெற முடியாத நிலை ஏற்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, இ-சேவை மையங்கள் மூலம் ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.