சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெற்றோர் மீது வழக்கு

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி ரயில் நிலையத்தில் யாசகம் பெற வைத்த பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில்வே போலீசார், நடைமேடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, யாசகம் பெற்றுக்கொண்டிருந்த சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, உண்மை சம்பவம் அம்பலமானது. மேலும், போதை பானங்களை சிறுமிக்கு வற்புறுத்தி ஊற்றிக் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி