முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்கு

திமுக முன்னாள் அமைச்சரும், துறைமுகம் தொகுதி எம்எல்ஏவுமான சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று தமிழக வெற்றிக் கழகத்தின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் சினோரா அசோக் உடன் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சேகர்பாபு மீது நான்கு பிரிவுகளின் கீழ் கடற்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் தவெக வேட்பாளர் சினோரா அசோக்கை சேகர்பாபு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி