டெல்லியில் இருவேறு கொலைச் சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட மடக்கும் வகையிலான கத்தி, Blinkit செயலி மூலம் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விதிப்படி 7.62 செ.மீ நீளம், 1.72 செ.மீ அகலம் கொண்ட கத்திகளை மட்டுமே ஆன்லைனில் விற்க வேண்டும். கொலை ஆயுதமான கத்தி 8 செ.மீ.க்கு மேலானது என்பதால், Blinkit குடோன்களில் சோதனை நடத்திய போலீசார் 55 கத்திகளை பறிமுதல் செய்தனர்.