தவெக எம்எல்ஏ மீதான வழக்கு.. பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணை

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.27) பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெறும் என நீதிபதி அறிவித்துள்ளார். மேலும், வழக்கு விசாரணையின்போது தொடர்புடைய வழக்கறிஞர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ள நிலையில், விசாரணை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕