அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததற்குப் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மனுதாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து சட்டமன்ற செயலாளரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 22க்கு ஒத்திவைத்தார்.
நன்றி: நியூஸ் 18