பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்கக்கோரிய மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஏப்.10) மீண்டும் ராமதாஸ் தரப்பு முறையீடு செய்தது. அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனக்கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், “வழக்கமான பட்டியலின்படி உரிய அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்” என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.