கேரட், உருளை விலை உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த கேரட், விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்து அழுகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்தனர். இந்நிலையில் தற்போது கேரட் வரத்து அதிகரிப்பின் காரணமாக கடந்த வாரங்களில் கிலோ 20 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் தற்போது ஊட்டி மார்க்கெட்டில் கேரட் கிலோ 85 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி