வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் ஊட்டி கேரட் மற்றும் பீன்ஸ் விலை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் கிலோ ரூ.100-க்கும், வெளிச்சந்தையில் ரூ.150 வரையிலும் விற்கப்படுகிறது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. தக்காளி கிலோ ரூ.8-ரூ.16, பெரிய வெங்காயம் ரூ.28-ரூ.36, சின்ன வெங்காயம் ரூ.50-ரூ.75, உருளைக்கிழங்கு ரூ.16 மற்றும் இஞ்சி ரூ.75-ரூ.150 வரை விற்பனையாகிறது.