கேரம் போட்டி.. தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை

கேரம் உலக கோப்பையில் தங்கம் வென்ற மித்ராவுக்கு தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த உலக கோப்பையில் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மித்ரா தங்கம் வென்றார். இந்நிலையில், ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த பணத்தில் தந்தைக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கித் தரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி