சரக்கு லாரியும் வேனும் மோதி விபத்து.. 10 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வேன் ஒன்றும், சரக்கு லாரி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லக்கிம்பூரிலிருந்து ஈசானகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த வேன் மீது, அதிவேகமாக வந்த சரக்கு லாரி மோதியது. இதில், வேன் முற்றிலுமாகச் சிதைந்துபோனது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி