சீன துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ‘ஓசன் மெலோடி’ என்ற சரக்கு கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்த நிலையில், இந்த தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் நிலை குறித்து தகவல் வெளியாகாததால், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.