மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் தவெக எம்எல்ஏ விஜய் தலைமையில் நடைபெற்ற விழாவில், புகுந்த மர்ம கும்பல் தவெகவில் இணைந்த ஆரியபட்டி பாண்டியன் என்பவரது காரின் கண்ணாடியை உடைத்து நாற்காலிகளையும் சேதப்படுத்தியது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எம்எல்ஏ விஜய் புகார் அளித்திருந்த நிலையில், அவர் பங்கேற்ற விழாவில் இச்சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.