15 முறை சுழன்ற கார்.. பதறவைக்கும் விபத்தின் சிசிடிவி வீடியோ

கர்நாடகா: சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த மெளலா அப்துல், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத்தடுப்பில் மோதி எதிர்திசையில் பாய்ந்து 15 முறை சுழன்று அடித்து விபத்துக்குள்ளானது. இதில் மௌலா, அவரது 2 மகன்கள் உயிரிழந்தனர். அவரது மனைவி, தாய், மற்றொரு மகன் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி