நேருக்கு நேர் மோதிய கார்-ஸ்கூட்டி.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் (வீடியோ)

உத்தரப் பிரதேசத்தின் ஜாண்சி பகுதியில், கார் ஒன்று ஸ்கூட்டி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த மோதலில் ஸ்கூட்டியில் பயணித்த இரு இளைஞர்களும் காற்றில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். விபத்து நடந்தும் கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில், வேண்டுமென்றே இடித்துவிட்டு சென்றதாக பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி