சென்னை காமராஜர் சாலையில், கார் கவிழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அவ்வழியே சென்ற 2 பைக்குகள், ஒரு கார் சேதமடைந்துள்ளது. விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.