கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிஞ்சுப்பள்ளி அருகே சாலை தடுப்பில் மோதியதால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கர்நாடகத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி பயணித்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பெங்களூருவை சேர்ந்த கிரிஜா மற்றும் ஓசூரை சேர்ந்த மம்தா ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.