டயர் வெடித்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்

சங்ககிரி அருகே டயர் வெடித்து கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது மாமனார் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோவைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சங்ககிரி அருகே வேகமாக சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் கார் சாலையோர தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. 
இந்த விபத்தில் சக்திவேல், அவரது மாமனார் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி