லாரி மீது மோதிய கார்.. 3 ஐயப்ப பக்தர்கள் பலி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சபரிமலைக்குச் சென்று சொந்த ஊருக்குத் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பயணித்த கார், லாரி மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த மணிகண்டன், கோவிந்தன், பழனிவேல் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕