சாலையில் அமர்ந்திருந்த 3 பேர் மீது ஏறிய கார் (வீடியோ)

உத்தரபிரதேசம் மாநிலம் கோட்வாலி ஃபதேகர் பகுதியில் நண்பர்கள் 3 பேர் சாலையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள்மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி