கோவை ஆர்.எஸ்.புரம் அருகே, டிரைவராக பணிபுரிந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வந்த அபுதாகிர் பாஷா (27) கடந்த 29ஆம் தேதி காணாமல் போனார். அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், சிரியன் சர்ச்ரோட்டில் சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது வயிற்றில் கத்திக்குத்து காயம் இருந்துள்ளது. விசாரணையில், அபுதாகிருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததும், இதனால் அவருக்கு மிரட்டல்கள் வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் பெண் விவகாரத்தில் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.