பற்றி எரிந்த கார்.. நூலிழையில் உயிர் தப்பிய 4 பேர்

சென்னை: பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத காரில் இருந்த 4 பேரும், சட்டென காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினர். கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனை கவனித்த போக்குவரத்து காவல் துறையினர், அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரியை நிறுத்தி, அந்த தண்ணீர் மூலம் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து, கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: DinakaranNews

தொடர்புடைய செய்தி