செங்கோட்டை அருகே காரில் வைத்து குண்டு வெடிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டு வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் இருந்த குண்டு வெடித்துள்ளது. ஹரியானாவில் வெடிமருந்து பொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கார் வெடித்ததில் அருகில் இருந்த 3 கார்கள் மீது தீ பற்றி எரிந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். மேலும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி