பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஜி-11 பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மற்றும் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். டெல்லியில் நேற்று (நவ.10) இதே போல் நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.