கார் மோதி விபத்து.. பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பைக்கில் சென்ற பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 2 மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕