சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா விக்கெட்டை இழந்துள்ளார். 252 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்யும் இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்து தடுமாறி வரும் நிலையில், ரச்சின் ரவீந்திரா வீசிய 26 ஓவரின் முதல் பந்தில் ரோகித் ஷர்மா (76) தனது விக்கெட்டை இழந்தார். தற்போது இந்திய 28 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.