காற்றில் உள்ள தூசி மற்றும் துகள்களை தடுக்கும் பணியை நம் மூக்கில் உள்ள ரோமங்கள் மேற்கொள்கிறது. இதை சிலர் அவ்வப்போது பிடுங்கி எடுக்கின்றனர். அப்படி செய்வதால் நுரையீரல் சார்ந்த பிரச்சனை, ஒவ்வாமை, மற்றும் சைனஸ் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், முடியை வேருடன் பிடுங்குவதற்கு பதில் சிறிய கத்திரிக்கோல் கொண்டு வெட்டி எடுப்பது பாதிப்பை குறைக்கும் என கூறப்படுகிறது.