சென்னையில் இன்று (பிப்.10) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பறவை காய்ச்சல் அச்சம் நிலவுவதால் 'ஆப்-பாயில்' சாப்பிடுவதை தவிர்க்கவும், மர்மமான முறையில் இறந்த கோழிகளை உண்ண வேண்டாம்” என்றார். இந்நிலையில், தற்போது அவர், “ஆஃபாயில் சாப்பிடக்கூடாது என கூறவில்லை. சிக்கனை தான் முழுமையாக சமைக்காமல் சாப்பிட வேண்டாம் என கூறினேன்” என விளக்கமளித்துள்ளார்.
நன்றி: நியூஸ்18