தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ல் நடைபெறுகிறது. இதனையொட்டி, தொழிற்சாலைகள், கட்டுமான மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து புகார் அளிக்கத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக் கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.