படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக, தமிழக அரசு UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கி, 25% மானியத்தையும் வழங்குகிறது. இந்த கடனை பெற, விண்ணப்பதாரர்கள் குறைந்தது 8-ம் வகுப்பு படித்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். வியாபாரம் சார்ந்த தொழில் தொடங்க இந்த தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு: www.msmeonline.tn.gov.in