தமிழகம் முழுவதும் இன்று (பிப்.7) நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுகள் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. "வெறும் 9 ஆயிரம் பேர் எழுதும் தேர்விற்கு கூட முறையான மையங்களை ஒதுக்க முடியாதா?" என கேள்வி எழுப்பி, தேர்வு எழுத வந்த தேர்வர்கள் மையங்களுக்கு வெளியே கடும் ஆவேசத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்ட இந்த திடீர் ரத்து, நீண்ட நாட்களாக தயாராகி வந்த மாணவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:பாலிமர்