கள்ள நோட்டுகளை ஒழிக்க மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தது. 9 ஆண்டுகள் கடந்தும் சிலர் இந்நோட்டுகளை கைவசம் வைத்திருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ரிசர்வ் வங்கி பழைய நோட்டுகளை மாற்ற அனுமதி அளித்துள்ளது என்ற வதந்தி பரவியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, “இந்த தகவல் தவறு, ரிசர்வ் வங்கி எந்த புதிய அறிவிப்பையும் வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளது.