அமைச்சர் சேகர்பாபுவின் பதவி காலம் குறித்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (நவ.13) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமைச்சர் சேகர்பாபு நல்ல நண்பர்தான். எனது பதவி மியூசிக்கல் சேர் என்கிறார். எனது பதவி 3 ஆண்டுகள் தான். ஆனால் அவரது அமைச்சர் பதவி இன்னும் 3 மாதங்கள் தான்” என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், “அதிமுக கட்சியில் பிளவு எதுவும் ஏற்படவில்லை. செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்” என்றார்.