தங்கம், வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. இன்று (பிப்., 04) ஒரு சவரன் ரூ.119,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,900-க்கும் விற்பனையாகிறது. இந்த நிலையில், நகை அடகுக்கடைகள், தனியார் வங்கிகளில் ஒரு கிராமுக்கு ரூ.9,500 வழங்கப்படுகிறது. கடந்த வாரம் தங்கம் விலை ரூ.134,000 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டிய போது, அடகுக்கடைகளில் ஒரு கிராமுக்கு ரூ.10,300 வரை வழங்கப்பட்டுள்ளது. சிலர் கையில் இருப்பு உள்ள தங்கத்தை அடகு வைத்து புதிய தங்கம் வாங்க திட்டமிட்டு வருகின்றனர்.