பட்டா இல்லாத நிலத்தை வாங்கலாமா? இதை கவனிங்க

பட்டா இல்லாத நிலத்தை வாங்குவது சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். தமிழகத்தில் நில உரிமையை உறுதி செய்யும் முக்கிய ஆவணம் பட்டா. இது இல்லாவிடில், அது அரசு நிலமாகவோ அல்லது மோசடியாகவோ இருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் வங்கிக் கடன், வீடு கட்ட அனுமதி பெறுவது மற்றும் நிலத்தை மீண்டும் விற்பது கடினம். எனவே, வில்லங்கச் சான்றிதழ், பழைய பத்திரங்களை வருவாய்த்துறை அல்லது வழக்கறிஞர் மூலம் சரிபார்த்த பிறகே நிலத்தை வாங்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி