புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குடும்ப உறுப்பினர்களின் அடையாளச் சான்றுகள், சமையல் எரிவாயு இணைப்பு விவரங்கள், குடும்பத் தலைவரின் புகைப்படம், முகவரி சான்று ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். மே 15-க்குப் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆவணக் குளறுபடிகளால் நிராகரிக்கப்பட்டோருக்கும் மீண்டும் வாய்ப்புள்ளது. இணைய வசதி இல்லாதவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப நிலை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.