கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். கொரோனா பெருந்தொற்று இல்லை என்று மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட 28 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.