சமைக்காமல் சாப்பிடலாம்: அசாமின் மந்திர அரிசிக்கு மீண்டும் மவுசு

அசாமில் விளைவிக்கப்படும் 'கோமல் சால்' என்ற மந்திர அரிசி, தண்ணீரில் 15-20 நிமிடங்கள் ஊறவைத்தால் சமைக்க தயாராகிவிடும். போரா சால் அரிசியை பதப்படுத்தி தயாரிக்கப்படும் இது, தனித்துவமான ஸ்டார்ச் அமைப்பை கொண்டுள்ளது. பண்டைய காலத்தில் விவசாயிகள் மற்றும் பயணிகளால் பயன்படுத்தப்பட்ட இந்த அரிசி, தற்போது மீண்டும் பிரபலமடைந்து ஆன்லைன் தளங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இது உடலுக்கு ஆற்றல், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவற்றை அளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி