பிரசார வேன் ரெடி.. 42 நாட்கள் மக்களை சந்திக்கும் விஜய்

தவெக 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 'ஜனநாயகன்' படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய் இனி முழு வீச்சில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பில் ஈடுபடவுள்ள விஜய் ஜூலை 2-வது வாரத்தில் பயணத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி அல்லது மதுரையில் இருந்து பயணத்தை தொடங்கலாமா? என்று யோசித்து வருகிறார். பிரத்யேக பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி