அதிமுகவில் விழுப்புரம் தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 2022ல் மாநிலங்களவை உறுப்பினரானார். அவரது பதவிக்காலம் 2028 வரை உள்ள நிலையில், தற்போது மயிலம் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன், அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதனால் மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் குறையும்.