சென்னையில் இயங்கி வந்த சி.வி.சண்முகம் அலுவலகம் மூடல்

அதிமுகவில் நிலவி வரும் அரசியல் பரபரப்புக்கு இடையே, சென்னையில் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தற்காலிக அலுவலகம் இன்று (மே 27) பூட்டப்பட்டது. அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, சி.வி.சண்முகம் தரப்பு நிர்வாகிகள் அலுவலகத்தை பூட்டிவிட்டு கிளம்பினர். இதற்கிடையே, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் தாம் உறுதியாக இருப்பதாக சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி