தமிழக கிரிக்கெட்டின் தந்தை என போற்றப்படும் சி.டி. கோபிநாத் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் வெற்றியை பெற்ற 1951-52 தொடரில் விளையாடிய கடைசி வீரரான சி.டி. கோபிநாத் (96), சென்னையில் இன்று (ஏப்.9) காலமானார். தமிழக அணியின் கேப்டனாகவும், இந்திய தேர்வு குழு தலைவராகவும் பணியாற்றிய இவரது மறைவு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் முடிவாக கருதப்படுகிறது. ரஞ்சி கோப்பையில் முத்திரை பதித்த சாதனையாளரான இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி