அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ராஜினாமாவை அடுத்து அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் கடந்த திங்கள் அன்று தவெகவில் இணைந்த 3 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளையும் சேர்த்து, தமிழகத்தில் காலியான சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இத்தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.