தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதிய சூழல் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வெற்றி பெற்ற கையோடு, எந்தவொரு எம்.எல்.ஏ-வாவது உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்தது இதற்கு முன்னால் நடந்ததுண்டா? இல்லை, இல்லவே இல்லை. அப்பட்டமாக நடைபெற்ற குதிரை பேரத்தின் பின்னணியில்தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது" என ஆளும் தரப்பை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.