தமிழ்நாட்டில் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட 5 தொகுதிகளின் நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அந்தந்த தொகுதிகளில் மக்களிடம் நன்கு அறிமுகமான, செல்வாக்குள்ள நபர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.