எல்.முருகன் ராஜினாமா.. மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு

மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன், அண்மையில் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.முருகன் தனது மத்திய இணையமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕