புதுச்சேரியில் காதலர் தினத்தை முன்னிட்டு மதுக்கடை ஒன்றில் சலுகை அறிவித்து போர்டு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு முழு பாட்டில் ஒயின் வாங்கினால் 4 டின் பீர் இலவசம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்த கலால் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சலுகை விலையில் மது விற்கக் கூடாது என எச்சரித்தனர். இதையடுத்து சலுகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், ஒரு சில கடைகளில் இந்த விற்பனை ரகசியமாக தொடர்வதாக கூறப்படுகிறது.