ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓராண்டிற்கும் மேலாக வசித்த இந்தியர்கள் தாயகம் திரும்பும்போது, சுங்கக் கட்டணம் இன்றி கொண்டு வர அனுமதிக்கப்படும் தங்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, பெண்கள் 40 கிராம் மற்றும் ஆண்கள் 20 கிராம் தங்கத்தை வரி இன்றி கொண்டு வரலாம். முன்பு விலை அடிப்படையில் (பெண்களுக்கு ரூ.1 லட்சம், ஆண்களுக்கு ரூ.50 ஆயிரம்) அனுமதி இருந்தது. இந்த திருத்தப்பட்ட விதிகள் பிப்ரவரி 2 முதல் அமலில் உள்ளன.