சென்னையில் புதுப்பிக்கப்பட்ட வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. கம்பளிப்பூச்சி வடிவிலான உட்புற அரங்கம், புதிய பாலிகார்பனேட் மேற்கூரை, பாதுகாப்பு வலைகள் மற்றும் பொதுமக்கள் சொந்தமாக 'மெய்நிகர்' வண்ணத்துப்பூச்சிகளை வடிவமைக்கும் டிஜிட்டல் திரை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிடும் சிறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕